தமிழ் திரையுலகில் பிரபலமாகி வரும் இளம் நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷூம் ஒருவர். தற்போது பிரபலமான திரைப்பட நடிகையாக வலம் வரும் அவர், தன் வாழ்வில் சந்தித்த சவால்கள் குறித்து, கடந்த ஜனவரி மாதம் திருச்சியில் நடைபெற்ற டெட்எக்ஸ் நிகழ்ச்சியில் உரையாற்றி இருந்தார். திரைத்துறையில் அவருக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்கள் குறித்தும் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். அவருடைய இந்தப் பேச்சு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.