தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “ஜன நாயகன்” திரைப்படம் 15 நாட்களில் ரூ.308 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்பார்ப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வரும் தளபதி விஜய், அரசியலில் முழுநேரமாக கவனம் செலுத்தும் முடிவை எடுத்ததையடுத்து, அவரது நடிப்பில் உருவான “ஜன நாயகன்” திரைப்படம் கடைசி படமாக வெளியானது. இதனால் படத்தின் மீது ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலகிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

கொண்டாட்டம்

கடந்த ஜூலை 23ம் தேதி உலகம் முழுவதும் வெளியான “ஜன நாயகன்” திரைப்படம் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் ஓடி வருகிறது. ஹெச்.வினோத் இயக்கில் உருவான இப்படத்தில், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன், கெளதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வசூல் சாதனை

வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற “ஜன நாயகன்” திரைப்படம், தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் கணிசமான வசூலை ஈட்டி வருகிறது. “ஜன நாயகன்” திரைப்படம் வெளியாகி 15 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் ரூ.308.67 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்த வசூல் விவரங்கள் குறித்து படக்குழு சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here