ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
ஆளப்போகும் தலைவர்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், கோபி சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான கே.ஏ.செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது; “தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தவரை ஒரு பக்கம் தியாகம், இன்னொரு பக்கம் மனிதநேயத்தோடு இயங்குகிற இயக்கம் ஆகும். மக்களோடு பணியாற்றக்கூடிய தலைவர் விஜய். நாளை தமிழகத்தை ஆளப்போகிற தலைவர் பழைய சரித்திரம் சொல்லும். காரணம் 2026 தேர்தல் வெற்றி என்பது சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய வரலாறாக அமையும், இந்தியாவே வியக்கும்.
புதிய மாற்றம்
தமிழகத்தில் முதலிடம் பெறக்கூடியவராக விஜய் திகழ்வார். மக்கள் கருத்துக் கணிப்பு தெளிவாக இருக்கும். முதல் வாக்கு அளிக்கின்ற அத்தனை பேரும் புதிய மாற்றத்தை, எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு ஒரு சிறந்த தலைவர் கிடைத்துள்ளார் என்ற எண்ணம் உள்ளது. அது 4 ஆம் தேதி பிரதிபலிக்கும். வெற்றிக்கு பிறகு விஜய் ஆட்சியை பிடிப்பார். நாங்கள் 150 முதல் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். கர்வத்தை கொண்டுள்ள சாம்ராஜ்யம் அழிந்து போகும். அதை யாராலும் தடுக்க முடியாது”. இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் கூறியிருக்கிறார்.












































