திருமணத்திற்கு பிறகு எதுவும் மாறியது போன்று தெரியவில்லை என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்திருகிறார்.

பழக்கம் இல்லை

திருமண வாழ்க்கை குறித்து நடிகை கீர்த்தி சுரேஷிடம் கேட்ட போது அவர் கூறியதாவது; “திருமணத்திற்கு பிறகு எதுவும் மாறியது போன்று தெரியவில்லை. எல்லாம் அப்படியே தான் இருக்கிறது. நிறைய அட்டென்ஷன் கிடைக்கிறது. எங்கு போனாலும் எங்களை புகைப்படம் எடுக்கிறார்கள். அதை நியூஸ் ஆக்கிவிடுகிறார்கள். அது எனக்கு பழகிவிட்டது. ஆனால் ஆண்டனிக்கு பழக்கம் இல்லை. அதனால் அவருக்கு சங்கடமாக இருக்கிறது. இருந்தாலும் அவர் எந்த புகாரும் சொல்வது இல்லை. எனக்காக எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறார்.

விருப்பம் இல்லை

ஆண்டனி தன் இன்ஸ்டாகிராம் கணக்கை பிரைவேட்டாக வைத்திருக்கிறார். அவருக்கு தன் புகைப்படங்களை வெளியிடுவதில் விருப்பம் இல்லை. இருந்தாலும் எனக்காக அவருடன் சேர்ந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கிறார். மீடியா முன்பு வர கூச்சப்பட்டாலும் எனது கெரியருக்கு இது முக்கியம் என்பதை புரிந்து கொண்டு நடக்கிறார் ஆண்டனி” என்று கூறியிருகிறார். ஆண்டனி தட்டிலும், கீர்த்தி சுரேஷும் பல ஆண்டுகளாக காதலித்து பின்னர் திருமணம் செய்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here