சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே விரைவில் ஏசி ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
ஏசி ரயில்
சென்னை நகரில் ஏசி வசதி கொண்ட புறநகர் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வகையில் தெற்கு ரயில்வே சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதற்கிணங்க சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே விரைவில் ஏசி ரயில் இயக்க மெமு ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தேர்வு
ஏசி ரயில் இன்னும் ஒரு மாதத்தில் தொழிற்சாலையில் இருந்து தயாராகிவிடும் என்றும், ஏசி ரயிலை இயக்குவதற்கு சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தை தேர்வு செய்துள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சேவை செங்கல்பட்டு வரை நீடிக்கும் திட்டமும் உள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அநேகமாக அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில், சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே ஏசி ரயில் இயக்கப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.