நயன்தாராவை போலவே தனக்கும் நெருக்கடி நிலை ஏற்பட்டதாக நடிகை பார்வதி பகீர் தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

சிறந்த நடிகை

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பார்வதி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகை நயன்தாராவின் பதிவு குறித்து பார்வதி கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; “சுற்றியிருப்பவர்களின் ஆதரவு கிடைக்காதபோது மனநிலை எப்படி இருக்கும் என்பதை நான் உணர்ந்துள்ளேன். ஒரு நிலைப்பாட்டை எடுக்கவும், அதுகுறித்து ஆதரவு அளிக்கவும் நீண்ட நேரம் தேவை இல்லை.

ஆதரவு

நயன்தாராவின் பதிவைப் பார்த்தவுடன் பகிர வேண்டும் என்று தோன்றியதாலேயே பகிர்ந்தேன். அவர் சுயமாக வளர்ந்தவர். தனது கேரியரை தானே உருவாக்கிக்கொண்ட லேடி சூப்பர் ஸ்டாரே இப்படி ஒரு பகிரங்க கடிதத்தை காரணம் இல்லாமல் எழுத வாய்ப்பு இல்லை. அவரைப் பற்றி அனைவருக்கும் நன்கு தெரியும். அவர் எதிர்கொண்ட அனுபவங்களை 3 பக்கங்கள் எழுதியுள்ளார். அதனால்தான் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தோன்றியது.

இதுவும் ஒரு காரணம்

நயன்தாராவை ஆதரித்து வரும் அனைவருக்கும் அந்தக் கடிதத்தில் இருக்கும் பிரச்சனை புரியும். பிறகு ஒருகட்டத்தில் அனைவரும் நம்மை போலவே மற்றவரையும் காண்போம். நான் அவரை ஆதரித்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும். ஏனெனில், நானும் இதுபோன்ற ஒரு அனுபவத்தை கடந்து வந்துள்ளேன். ஆதரவு ஒருவரை எப்படி மாற்றும் என்பதையும் அறிவேன். அந்த வகையில் யோசித்துப் பார்த்தால், ஆதரவு கிடைக்காமல் இருப்பவர்களுக்கும், குறிப்பாக, அவர்கள் பெண்களாக இருந்தால், கண்டிப்பாக அவர்களுக்காக நான் துணை நிற்பேன்” என்று கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here