தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் பேசியதை பார்த்து பிரமித்துவிட்டதாக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார்.

ஆக்ரோஷ பேச்சு

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு கடந்த மாதம் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் பங்கேற்று சுமார் 45 நிமிடங்கள் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். விஜய்யின் பேச்சு மெய் சிலிர்க்க வைத்ததாக மாநாட்டில் கலந்துகொண்ட தவெக தொண்டர்கள் தெரிவித்திருந்தனர்.

பெருமை

இந்த நிலையில் மாநாட்டில் விஜய்யின் பேச்சு அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சி. சந்திரசேகர் கருத்து தெரிவிதிருக்கிறார். அவர் கூறியதாவது; “மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார். அவர் இப்படி பேசுவார் என நான் நினைக்கவே இல்லை. என் மகன் சினிமாவில் நடித்து பார்த்திருக்கிறேன். ஆனால், மேடையில் அப்படி பேசியதை பார்த்து பிரமித்துவிட்டேன். மனதிற்குள் இருக்கும் வேகம், சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தாகம் என அனைத்தும் சேர்ந்துதான் அப்படி விஜய்யை பேச வைத்தது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here