தான் நடிக்கும் படங்களின் கதைகளை தேர்வு செய்வதில் சில தவறுகள் செய்துவிட்டேன் என நடிகை பூஜா ஹெக்டே வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.

தொடர் தோல்வி

தமிழில் “முகமூடி” என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே, அதன்பின் பட வாய்ப்புகள் எதுவும் அமையாததால் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு சில வெற்றி படங்களை கொடுத்திருந்த நடிகை பூஜாவுக்கு, கடந்த 2020 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்த “அல வைகுந்தபுரமுலு” திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான “மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுல, ராதே ஷியாம், பீஸ்ட், ஆச்சார்யா, சர்க்கஸ் மற்றும் சல்மான் கானுடன் இணைந்து நடித்த “கிசிகி பாய் கிசிகி ஜான்” என தொடர்ந்து ஆறு தோல்வி படங்களை கொடுத்துள்ளார் நடிகை பூஜா. 

உஷாரா இருக்கேன்

இதுகுறித்து அவர் கூறுகையில்; “நான் நடிக்கும் படங்களின் கதைகளை தேர்வு செய்வதில் ஏற்கனவே சில தவறுகள் செய்துவிட்டேன். அந்த தவறுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்வதில் உஷாராக இருக்கிறேன். தற்போது கதைகளை தேர்வு செய்வதில் எனது அணுகுமுறையை முழுமையாக மாற்றிக்கொண்டுள்ளேன். இனிமேல் கதைகள் தேர்வு விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பேன். வித்தியாசமான கதைகளில் நடிக்க முக்கியத்துவம் தருவேன். அடுத்த ஆண்டு எனக்கு நிறைய வெற்றிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here