கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பால் இந்தி தொலைக்காட்சி நடிகை டோலி சோகி மும்பையில் இன்று காலமானார்.
சீரியல் நடிகைகள்
இந்தி டிவி சீரியல்களான ஜனக், களாஷ், ஹபி உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் டோலி சோகி. இவரது சகோதரி அமந்தீப் சோகி. இவரும் பெடமீஸ் டில் என்ற தொடரில் நடித்துள்னர். இதனிடையே, அமந்தீப் சோகி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதேபோல், டோலி சோகி கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக டோலி சோகி சின்னத்திரை தொடரில் இருந்து விலகினார். சகோதரிகள் இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
அடுத்தடுத்து மரணம்
இந்நிலையில், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட அமந்தீப் சோகி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அமந்தீப் சோகியின் சகோதரி டோலி சோகி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இரண்டு நாட்களில் சின்னத்திரை சகோதரிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.