பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மீராவின் மறைவு செய்தி திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள விஜய் ஆண்டனியின் வீட்டில் மீராவின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திரையுலகினர் பலர் திரண்டு வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து இன்று காலை மீராவின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நுங்கம்பாக்கத்தில் உள்ள புனித தெரசா தேவாலயத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி முடிந்தவுடன் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here