நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவால் அவரது ரசிகர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ரசிகர்கள் கொண்டாடும் நடிகர்
அர்ஜுன் ரெட்டி என்ற மிகப்பெரிய வெற்றி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான நடிகராக அறியப்பட்டவர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்த விஜய் தேவரகொண்டா, தமிழில் நோட்டா, டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக உள்ள விஜய் தேவரகொண்டாவை, தமிழ் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பல வேற்றுமொழி ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
வெற்றி நாயகன்
நுவ்விலா, லைஃப் இஸ் பியூட்டிஃபுல் மற்றும் எவடே சுப்ரமணியம் போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த விஜய் தேவரகொண்டா, பெல்லி சூப்புளு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு அவர் நடித்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம் வெளியாகி தெலுங்கு திரை உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. ரிலீஸான அனைத்து திரையரங்குகளிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று கொண்டாடப்பட்ட இந்த திரைப்படம், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனை படைத்து உலகெங்கிலும் பிரபலமானது. அதனைதொடர்ந்து 2019ஆம் ஆண்டு வெளியான டியர் காம்ரேட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து, விஜய் தேவரகொண்டாவை மீண்டும் ஒருமுறை இந்திய அளவில் பிரபலம் அடையச் செய்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஒரே சமயத்தில் 4 மொழிகளில் இந்தப் படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது.
விரைவில் அறிவிக்கிறேன்!
‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இவரும் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இதற்கு இருவர் தரப்பில் இருந்தும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா சமூக வலைதளப் பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அதில், ஒரு ஆணும், பெண்ணும் கைக்கோர்த்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘நிறைய நடக்கிறது. ஆனால், இது உண்மையில் சிறப்பானது. விரைவில் அறிவிக்கிறேன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு விஜய் தேவரகொண்டா தனது காதல் குறித்து அறிவிக்கவுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், அது ராஷ்மிகாவா? இல்லை சமந்தாவா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ‘குஷி’ திரைப்படத்தின் போது சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் நெருக்கமாக பழகியதாக தகவல் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.