இந்தியன் 2 படத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள காட்சிகளை பார்த்த நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் ஷங்கரை பாராட்டியுள்ளார்.

கட்டாயத்தில் ஷங்கர்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதன் தொடர்ச்சியாக இப்படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு பல பிரச்சனைகளுக்கு இடையே விறுவிறுப்பாக நடந்து வந்தது. சமீபத்தில் இப்படக்குழுவினரை வேலை வாங்கும் ஷங்கரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் இயக்குநர் ஷங்கர், இந்தப் படத்தை முடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில், முழு வீச்சில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இந்தியன் 2 படத்தில் ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சின்ஹா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

கமல்ஹாசன் பாராட்டு

இந்நிலையில், இந்தியன் 2 படத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள காட்சிகளை பார்த்து இயக்குநர் ஷங்கருக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். தற்போது ராம்சரண் நடிக்கும் “கேம் சேஞ்சர்” படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். அதை முடித்துவிட்டு மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபடுவார். இந்தப் படத்தை லைகா நிறுவனமும், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தின் டீசர் ஜூலை மாதம் வெளியாகும் என்றும், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு இந்தியன் 2 திரைப்படம் வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here