பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

வசூலில் சாதனை

சமீபத்தில் லைகா நிறுவனம் தயாரித்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தது. இந்த திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் சேர்ந்து தயாரித்திருந்தது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட ரூ.500 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனையும் படைத்தது. அதேசமயம் படத்தைப் பார்த்த சிலர் படத்தில் பல மைனஸ் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தனர். அது அனைத்தையும் பாகம் இரண்டில் மணிரத்னம் பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பெரும் ஏமாற்றம்

இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தலைகீழாக மாற்றியது. மேலும் இந்த திரைப்படம் வெறும் ரூ.300 கோடிகளை மட்டுமே வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் படக்குழுவினர் மட்டும் இல்லாமல் ரசிகர்களும் பெரும் ஏமாற்றத்தை அடைந்தனர். இந்த தோல்வியினால் மணிரத்னம் வைத்த விருந்தில்கூட இப்படத்தில் நடித்த முன்னணி கலைஞர்கள் பங்கேற்கவில்லை என்றும் கூறப்பட்டது.

திடீர் சோதனை

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தொடர்புடைய 8 இடங்களில் அமலாகத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். தியாரகராய நகர், காரப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாக கூரப்படுகிறது. இந்நிறுவனம் சுபாஸ்கரன் அல்லிராஜா என்பவருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் சோதனை திரைத்துறையினருக்கு மத்தியில் பெரும் சலசலசப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here