குடும்ப பங்கான கதைகளில் நடித்ததால் தனக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் இப்போது தமிழ் சினிமா மிகவும் மாறிவிட்டது என்றும் நடிகை தேவயானி கூறியுள்ளார்.
குடும்பத்து பெண்
90களில் நடிக்க துவங்கிய நடிகை தேவயானி காதல் கோட்டை, விவசாயி மகன், காதலி, பெரிய இடத்து மாப்பிள்ளை, சூர்யவம்சம், மறுமலர்ச்சி, உதவிக்கு வரலாமா, சொர்ணமுகி, நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வந்தார். காதலுடன், நியூ, கிரி உள்ளிட்ட படங்களில் நடித்த பிறகு, நான்கு வருடம் இடைவேளைக்கு பிறகு, மீண்டும் 2009 ஆம் ஆண்டு நடிக்கத் துவங்கினார். ஐந்தாம் படை படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். சின்னத்திரை, வெள்ளித்திரை என்று அனைத்திலும் தற்போது நடித்து வரும் நடிகை தேவயானி, குடும்ப பாங்கான கதைகளிலே நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
சர்ச்சை பதில்
ஆரம்ப காலத்தில் இருந்தே கவர்ச்சி ஏதும் இல்லாமல் புடவை, தாவணி என்று குடும்ப பெண்ணாகவே நடித்துவிட்டார் தேவயானி. இந்நிலையில் இப்போதைய காலகட்டத்தில் நீங்கள் இருந்து இருந்தால் சினிமாவில் கவர்ச்சியாக நடித்திருப்பீர்களா? என கேள்வி எழ்ப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்துள்ள தேவயானி, “நல்ல வேலையாக இப்போதைய காலகட்டத்தில் நான் பிறக்கவில்லை. பிறந்திருந்தால் சினிமாவில் நடிப்பது எனக்கு கடினமான விஷயமாக இருந்திருக்கும்” என கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் இப்போது அதிக கவர்ச்சி உள்ளது. கவர்ச்சியாக இருக்கும் நடிகைகள் மட்டும்தான் மிகவும் பிரபலமாக முடியும் என்று தேவயானி கருத்து கூறியுள்ளார்.