ராகவா லாரன்ஸ் நடிப்பில் ருத்ரன் திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் காஞ்சனா படத்தின் அடுத்த பாகத்தை பற்றி கூறியுள்ளார்.
கதை தான் முக்கியம்
ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான ருத்ரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் இயக்குநரான கதிரேசன் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் கோவைக்கு சென்று இருந்தனர். கோவை கேஜி திரையரங்கில் புதுப்பிக்கப்பட்ட ஒரு திரையை நடிகர் ராகவா லாரன்ஸ் திறந்து வைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராகவா லாரன்ஸ் கூறுகையில்; “மூன்று வருடங்கள் கழித்து ருத்ரன் திரைப்படம் மூலம் ரசிகர்களை பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இப்படத்தில் பெற்றோர்களை பிரிந்து இருக்கும் குழந்தைகள் குறித்து ஒரு நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறியுள்ளோம். சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் கதை அம்சம் நல்லதாக இருந்தால் ரசிகர்களை அப்படத்தை விரும்பி பார்ப்பார்கள்.
மீண்டும் காஞ்சனா
ருத்ரன் படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு காஞ்சனாவின் அடுத்த பாகத்தை மீண்டும் எடுப்பேன்”. சந்திரமுகி இரண்டாம் பாகம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, சந்திரமுகி படத்தை முழுவதுமாக இயக்குநர் பி.வாசு பார்த்துக் கொள்கிறார். ருத்ரனை யாராலும் அழிக்க முடியாது. அவர் வந்துவிட்டார். ருத்ரதாண்டவத்தை ஆடி வருகிறார். இதற்கு சிவனுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்” என கூறினார்.