தேவையில்லாம எங்களை டச் செய்தால் அது நெருப்போடு விளையாடுற மாதிரி தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தெளிந்த நீரோடை

கடந்த 14 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக உறுப்பினர்களின் சொத்து பட்டியல் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்; “எங்களை தேவையில்லாமல் டச் பண்ணா, அது நெருப்புடன் விளையாடுற மாதிரி தான். தெளிந்த நீரோடைப் போல, திறந்த புத்தகம் போல, எல்லாருடைய சொத்து பட்டியலும் ஏற்கனவே பதிவிட்டிருக்கிறோம். தற்போது இணையதளத்தில் யாருக்கு எவ்வளவு சொத்து உள்ளது என்பதை சுலபமாக தெரிந்துகொள்ளும் வசதி வந்துவிட்டது. இதை பெரிய அளவிற்கு மறைக்க வேண்டிய விஷயமே இல்லையே.

மடியில் கணம் இல்லை

அப்படி உங்களுக்கு ஏதேனும் தவறாக தென்பட்டால், சீஸ் பண்ணிக்கொள்ளுங்கள். யாரிடம் அப்படி உங்களுக்கு தென்பட்டாலும் சொல்லுங்கள். அப்படி எதுவும் எங்களிடம் இல்லை என்பதால் தான், நாங்கள் பேசுகிறோம். மடியில் கணம் இல்லாதபோது பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. மிரண்டவன் கண்ணனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல, சொத்து வைத்திருப்பவர்களுக்கு தான் இதைப்பற்றி பயம் ஏற்படும். எங்களுக்கு கிடையாது. அதிமுகவின் கூட்டணியில் பாஜக இருப்பதில் எந்த மாற்றமும் இல்லை. மத்திய பாராளுமன்ற குழு தான் எதுவாக இருந்தாலும் முடிவெடுக்கும் தவிர, அண்ணாமலை முடிவு எடுக்க முடியாது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here