நாகினி சீரியல் நடிகை சயந்தினி கோஷ் ஆன்லைன் மூலம் தனது காதலரைத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.
நாகினி நடிகை
நாகினி தொலைக்காட்சி சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் சயந்தினி கோஷ். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
ஆன்லைனில் திருமணம்
இவர் தனது நீண்டநாள் காதலரான அனுராக் திவாரி என்பவரைக் திருமணம் செய்ய முடிவு செய்தார். ஆனால், அதற்குள் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், திருமணம் செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், லாக் டவுன் சூழ்நிலைகள் சரியாகவில்லை என்றால் ஆன்லைன் மூலம் முகம்பார்த்து திருமணம் செய்துகொள்ளலாம் என்ற முடிவில் இருப்பதாக அறிவித்துள்ளார்.
கடும் பாதிப்பு
கொரோனா பிரச்சனைகள் முடிவடைந்த பின்னர் முறைப்படி திருமணத்தைப் பதிவு செய்யலாம் எனத் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக பல திருமணங்கள் இதுபோல் எளிமையாக நடப்பதால், திருமணத்தைச் சார்ந்து தொழில் செய்து வருபவர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.