தசரா படத்தில் தனக்கு கிடைத்த அனுபவம் குறித்தும் கீர்த்தி சுரேஷின் நட்பு குறிக்கும் நடிகை பூர்ணா கூறியுள்ளார்.

வாய்ப்புகள் குறைவு

இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகருக்கு அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இந்த படத்தில் பரத் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி போன்ற பல படங்களில் நடித்துள்ளார் நடிகை பூர்ணா. இவர் நடித்த தமிழ் படங்கள் எதுவும் கைகொடுக்காத நிலையில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். 2021ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி படத்தில் நடித்திருந்தார். இத்தனை படங்கள் நடித்திருந்தாலும் பூர்ணாவின் நடிப்பை நிரூபிக்கும் அளவிற்கு இன்னும் சரியான படங்கள் அமையவில்லை. நடிகை பூர்ணா தற்போது நானி – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பெரும் பொருட்செலவில் பேன் இந்தியா படமாக வெளியான தசரா படத்தில் நடித்துள்ளார்.

நட்புக்காக

துபாய் தொழிலதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை பூர்ணா, சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை பூர்ணாவிற்கு இன்னும் சில தினங்களில் குழந்தை பிறக்கப் போகிறது. இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி வெளியான தசரா திரைப்படத்தில் தனக்கு கிடைத்த கதாபாத்திரம் குறித்து நடிகை பூர்ணா மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், “இதுபோன்ற மிகச்சிறந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் அதிக மகிழ்ச்சி அடைகிறேன். பேன் இந்தியா படத்தில் நடித்ததையும் பெருமிதமாக உணர்கிறேன். தசரா படக்குழுவினர்களுடன் நான் இருந்த ஜாலியான தருணங்கள் எல்லாம் மிஸ் செய்கிறேன். இப்படத்தில் எனது தோழி கீர்த்தி சுரேஷ் உண்மையான நட்புக்காக மட்டுமே நடித்தேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here