சந்திரமுகி 2 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

புதிய முயற்சி

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, வடிவேலு, நயன்தாரா உள்ளிட்ட பலரும் நடித்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. சூப்பர் ஹிட் படமாக அமைந்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் பி. வாசு. சந்திரமுகி 2 படத்தில் லாரன்ஸ், கங்கனா ரானாவத், வடிவேலு, ராதிகா, லட்சுமி மேனன், மஹிமா நம்பியார் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகின்றது. எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.

சேட்டை செய்யும் வைகைபுயல்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதால், பாகம் இரண்டின் மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. அது மட்டும் இல்லாமல் அந்த படத்தில் அனைத்து பாடல்களும் வேற லெவல் ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக “ரா ரா, கொக்கு பரபர போன்ற பாடல்கள் படத்திற்கு பக்க பலமாக அமைந்தது. அதுபோன்ற பாடல்கள் இந்த படத்திலும் இருக்குமா என்று ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

ஒரே சிரிப்பு

இந்நிலையில் சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இன்று வெளியான புதிய புகைப்படத்தில் லாரன்ஸ் மடியில் வைகைப்புயல் வடிவேலு அமர்ந்து சேட்டை செய்வது போல உள்ளது. கண்டிப்பாக படத்தில் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது இதில் இருந்து தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் படக்குழுவினர் அனைவரும் அமர்ந்து குரூப் போட்டோவும் எடுத்துள்ளனர். அந்த புகைப்படமும் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here