இந்தியத் திரையுலகில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையான மறைந்த ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக வெளியிடவுள்ளனர்.

மனம் கவர்ந்த நடிகை

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் கடந்த 50 வருடங்களில் 300க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. பத்மஸ்ரீ, தேசிய திரைப்பட விருது, பல ஃபிலிம் ஃபேர் விருதுகள், மாநில அரசு விருதுகள் மற்றும் சர்வதேச விருதுகளை அவர் வென்றுள்ளார். இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை, அவரது குடும்ப நண்பர் தீரஜ்குமார் புத்தகமாக வெளியிட இருக்கிறார்.

தனிமை விரும்பி

ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் இதுகுறித்து கூறுகையில், “ஸ்ரீதேவி இயற்கையின் சக்தி. தனது கலையை அவர் திரையில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டபோது மகிழ்ச்சியாக இருந்தார். அதேசமயம், அவர் தனிமை விரும்பியாகவும் இருந்தார். தீரஜ்குமாரை, ஸ்ரீதேவி தனது குடும்பத்தில் ஒருவராகவும் கருதினார். அவர் ஒரு ஆய்வாளர், எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர். ஸ்ரீதேவியின் அசாதாரண வாழ்க்கையை அவர் புத்தகமாக எழுதுகிறார் என்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று கூறியுள்ளார்.

ஆதரவுக்கு நன்றி

ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக வெளியிடுவது குறித்து தீரஜ்குமார் கூறுகையில், “மதிப்பிற்குரிய வெஸ்ட்லாண்ட் புக்ஸ் எனது அறிமுக புத்தகத்தை புதுப்பித்து வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய லிட்டரரி ஏஜெண்ட் அனிஷ் சண்டி இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். போனி கபூர் மற்றும் அவரது குடும்பம், லதா, சஞ்சய் ராமஸ்வாமி, சூர்யகலா, மகேஷ்வரி, கார்த்திக், ரீனா மற்றும் சந்தீப் மார்வா ஆகியோர் எனக்கு அளித்துள்ள ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here