வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் மாதிரி, இந்த நிமிஷம் மட்டுமே நிஜம் எனக் கூறி நடிகை மீனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, பின்னர் கதாநாயகியானார். ரஜினி, கமல், அஜித், விஜய், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது அம்மா, அக்கா, அத்தை என கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வரும் அவர், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

ஆழ்ந்த துக்கம்

கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகை மீனாவுக்கும் – வித்யாசாகர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் மாதம் மரணமடைந்தார். கணவர் மரணத்தால் துயரத்தில் இருந்து வந்த நடிகை மீனாவுக்கு சினிமா நட்சத்திரங்கள் ஆறுதல் கூறி வந்தனர். திரையுலகை சேர்ந்த அவரின் தோழிகள் அவரை வெளியே அழைத்துச் செல்கிறார்கள்.

மாற்றம்

மெல்ல மெல்ல தேறி வரும் மீனா மீண்டும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கிறார். தன் சிறு வயதில் இருந்து லேட்டஸ்ட் வரை எடுத்த புகைப்படங்கள் அடங்கிய வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மீனா கூறியிருப்பதாவது; “வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் போன்றது. வாழுங்கள். நம்மிடம் இருப்பது இந்த நிமிடம் மட்டுமே” என தெரிவித்துள்ளார். மீனாவின் இந்த போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள், அவரிடம் ஏற்பட்டிருக்கும் இந்த சிறு மாற்றத்தை நினைத்து நிம்மதி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here