நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், பேரரிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பாக முதல்வரிடம் வலியுறுத்தியதாக கூறினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாகவும், அனைத்துத் துறைகளும் வேகமாக இயங்கி வருவதாகவும் தெரிவித்தார்.