உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை பூர்ணிமா பாக்யராஜின் தாய் சுபலட்சுமி சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்களும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சினிமாவை ஆண்ட பாக்யராஜ்

1990களில் தமிழ் சினிமாவை தன் கைவசம் வைத்திருந்தவர் இயக்குநர் பாக்யராஜ். இயக்குநராக மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும், நடிகராகவும், இசையமைப்பாளராகவும் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். மேலும் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களிலும் அவர் இயக்குநராக பணியாற்றியுள்ளார். கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் இயக்கிய பாக்யராஜ், 75 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பாக்யராஜ் பெற்றுள்ளார். 1984 ஆம் ஆண்டு நடிகை பூர்ணிமாவை பாக்யராஜ் திருமணம் செய்துகொண்டார்.

மரணம், இரங்கல்

பூர்ணிமா பாக்யராஜ் ‘நெஞ்சில் ஒரு முள்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு கிளிஞ்சல்கள், தீராத விளையாட்டுப்பிள்ளை, பயணங்கள் முடிவதில்லை, பரீட்சைக்கு நேரமாச்சு, தாய் முகாம்பிகை, டார்லிங் டார்லிங் டார்லிங், கண் சிவந்தால் மண் சிவக்கும், தங்கமகன், விதி, நீங்கள் கேட்டவை போன்ற பல படங்களில் நடித்தார். விஜய், மோகன்லால் நடித்து மெகா ஹிட்டான ‘ஜில்லா’ படத்திலும் அவர் நடித்திருக்கிறார். நடிகை பூர்ணிமா தமிழில் 30 படங்களிலும், மலையாளத்தில் 25 படங்களுக்கு மேலும் நடித்துள்ளார். பாக்யராஜ் – பூர்ணிமா தமதிக்கு சரண்யா என்ற மகளும், சாந்தனு என்ற மகனும் உள்ளனர். அதில், சாந்தனு தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், பூர்ணிமா பாக்யராஜின் தாய் சுபலட்சுமி, கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 85. சுபலட்சுமியின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற உள்ளது. பூர்ணிமாவின் தாய் மரணமடைந்த செய்தியை அறிந்த திரைப் பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து கொண்டு இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here