விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் பொதுமக்களால் மிக எளிமையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விநாயகர் சதுர்த்தி

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்துவதற்கும், விநாயகர் ஊர்வலத்திற்கும் அரசு தடை விதித்துள்ளது. மக்கள் வீடுகளில் இருந்தே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும்படி தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கட்டுப்பாடுகளுடன் வழிபாடு

அதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள், விநாயகர் சதுர்த்தி விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் எளிமையான முறையில் வீடுகளிலேயே கொண்டாடி வருகின்றனர்.
அத்துடன், சிறிய கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதால் அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள், தனிமனித இடைவெளியை கடைபிடித்தும், மாஸ்க் அணிந்த படியும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன், பிரசாதம் இன்றி விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தப்பட்டது. புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மணக்குள விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here