தமிழகத்தில் இரண்டாம் தலைநகரம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாக அமைச்சர்களிடையே மாறுபட்ட கருத்து நிலவி வருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இரண்டாம் தலைநகரம்!

தமிழகத்தின் நிர்வாக சிக்கல்களை தீர்ப்பதற்காக இரண்டாம் தலைநகர் உருவாக்கப்பட வேண்டும் எனவும் மதுரையை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் சில தினங்களுக்கு கூறியிருந்தார். இதற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூம் ஆதரவு தெரிவித்தார். தூத்துக்குடி துறைமுகம் அருகே இருப்பதாலும், தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் மதுரை சரியான இடம் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

மாறுபட்ட கருத்து

இந்த நிலையில், திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சியை தமிழகத்தின் 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் எனவும் திருச்சியை 2வது தலைநகராக்கும் எம்.ஜி.ஆரின் கனவு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்துவோம் எனவும் கூறியுள்ளார். முதலமைச்சர், துணை முதலமைச்சரிம் மன்றாடி திருச்சியை 2வது தலைநகராக்க முயற்சி எடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மதுரையை 2வது தலைநகராக்க வேண்டுமென அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் கோரியிருந்த நிலையில், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருச்சியை 2வது தலைநகராக்க வேண்டுமென கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here