அவென்ஜர்ஸ் எண்ட் கேம் பட டிரெய்லரின் சாதனையை மறைந்த சுஷாந்த் சிங் நடித்த படத்தின் டிரெய்லர் முறியடித்துள்ளது.
உலக சாதனை
இந்திய அளவில் ஷாருக்கானின் ஜீரோ திரைப்படத்தின் டிரெய்லர் 2 மில்லியனுக்கும் மேலான லைக்ஸ்களை பெற்று சாதனை படைத்தது. அந்த சாதனையை விஜய்யின் பிகில் திரைப்படம் முறியடித்தது. சமீப காலமாக ஹாலிவுட் படங்களின் சாதனைகளை முறியடித்து வருகிறது இந்திய திரைப்படங்கள். அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் அனைவரும் வியந்து பார்க்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பிரம்மாண்டமான ஹாலிவுட் படமாகும். அப்படத்தின் டிரெய்லர் சாதனையை மறைந்த சுஷாந்த் சிங்கின் கடைசி படமான “தில் பெச்சாரா” படம் முறியடித்துள்ளது. 2014ஆம் ஆண்டு வெளியாகி அனைவராலும் பேசப்பட்டு மெகா ஹிட்டான “the fault in our stars” படத்தின் ரீமேக் தான் இது. மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் “தில் பெச்சாரா”, கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர் காதலால் இணைகிறார்கள் என்பதை மையக் கருத்தாக வைத்து சந்தோஷமாகவும், சில சோகங்களையும் கலந்து உருவாகியுள்ள படம்.
அவென்ஜ்ர்ஸ் சாதனை முறியடிப்பு
உலகளவில் அதிகமான லைக்ஸ்களை பெற்ற படம் தான் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம். இப்படத்தின் டிரைலர் மட்டும் 4 மில்லியன் லைக்ஸ்களை பெற்றுள்ளது. இந்த சாதனையை முறியடித்தது சுஷாந்த் நடித்த “தில் பெச்சாரா” திரைப்பட டிரெய்லர். தற்போது வரையில் அப்படம் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது. சுஷாந்த் சிங் மரணம் அடைந்ததை மறக்க முடியாமல் இப்படத்தின் டிரெய்லரை உலகளவில் சாதனை படைப்பதற்காக ஷேர் செய்து வைரலாக பரவி உள்ளனர் அவரது ரசிகர்கள். முகேஷ் சோப்ரா இயக்கிய இப்படத்தில், சைப் அலிகான், சஞ்சனா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மானின் இசை படத்திற்கு பெரிய பலம் என்று சொல்லலாம்.
பிரபலங்களின் பங்கு
சுஷாந்த் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர், நடிப்பில் உருவாகிய கடைசி படமான “தில் பெச்சாரா” பட டிரெய்லரை ரசிகர் மட்டுமல்லாமல், பாலிவுட் பிரபலங்களும் ஷேர் செய்து வருகின்றனர். அனுஷ்கா சர்மா, பிரியங்கா சோப்ரா, சாரா அலி கான், நீல் நிதின் முகேஷ் என பிரபலங்கள் பலரும் இந்த டிரெய்லரை ஷேர் செய்துள்ளனர். இப்படம் கண்டிப்பாக வெற்றி அடையும் எனப்பேசி வரும் பலர், அதனைப் பார்க்க சுஷாந்த் உயிருடன் இல்லையே என்ற சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். டிரெய்லர் முழுவதும் சிரித்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்கும் சுஷாந்தின் நடிப்பை அனைவரும் வியந்து பாராட்டி வருகின்றனர். அவரது கடைசி படமான இதனை திரையரங்குகளில் வெளியிடுமாறு குடும்பத்தினரும், ரசிகர்களும் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் “தில் பெச்சாரா” படம் OTTயில் வெளிவருவது குறிப்பிடத்தக்கது .