கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறியிருப்பதாக அம்மாநில சட்டத்துறை அமைச்சர் கவலை தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் பாதிப்பு

சீனாவின் வுகானில் உருவான கொரோனா வைரஸ், தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில தினங்களாக அதிகரித்து காணப்படுகிறது. இதுவரை 24,942 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 406 பேர் உயிரிழந்துள்ளனர். இனிவரும் நாட்களில் இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சமூக பரவல்

சில தினங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்தது. இதில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து 80 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கர்நாடகாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறியிருப்பதாக அம்மாநில சட்டத்துறை அமைச்சர் மதுசுவாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், தும்கூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  8 பேரின் நிலைமை ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறினார். கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறியிருப்பது கவலை அளிப்பதாகவும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முயற்சித்தாலும், அதை கட்டுப்படுத்துவது கடினமான பணியாக உள்ளதாகாவும் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கொரோனா சமூக பரவல் மாறவில்லை என முதலமைச்சர் எடியூரப்பா, துணை முதல்வர் அஷ்வந்த் நாராயண், மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் சுதாகர் ஆகியோர் மறுத்து வரும் நிலையில், சட்டத்துறை அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here