நடிகர் விஜய்யால் தனது வாழ்க்கையே போய்விட்டதாக பிரபல இயக்குநர் சக்தி சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார்.

விஜய்யால் நஷ்டம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் ரீலிஸூக்கு தயாராக இருக்கிறது. விஜய் படங்களை தயாரிப்பதற்கும், வெளியிடுவதற்கும் பலரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், விஜய் படத்தால் பல கோடி ரூபாய் நஷ்டம் அடைந்ததாக பிரபல இயக்குநர் சக்தி சிதம்பரம் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ஒரு காலத்தில் தளபதி விஜய்யின் படங்களை வாங்கி விநியோகம் செய்பவர்களுக்கு அரசியல் பிரச்சனைகள் இருந்தது. தற்போதும் இதுபோன்ற பிரச்சனைகள் எழுந்தாலும் பெரிய நிறுவனங்கள் அதனை சமாளித்து விடுகின்றன.

‘காவலன்’ சிக்கல்கள்

இந்த நிலையில், நடிகர் விஜய்யால் தனது வாழ்க்கையே போய்விட்டதாக இயக்குநர் சக்தி சிதம்பரம் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சார்லி சாப்ளின், சண்டை, லவ்லி , காதல் கிறுக்கன், கோவை பிரதர்ஸ் போன்ற படங்களை இயக்கியவர் சக்தி சிதம்பரம். இவரது படங்கள் அனைத்துமே கமர்சியல் ரீதியாக ஓரளவு வரவேற்பைப் பெரும் படங்களாக இருந்து வந்தது. இவர் விஜய் நடித்த ‘காவலன்’ படத்தை வாங்கி தமிழகம் முழுவதும் வெளியிட்டுள்ளார். ஆனால் அப்போது நிலவிய அரசியல் சூழ்நிலையால் அந்த படத்தை குறித்த தேதியில் வெளியிட முடியாமல் ஏராளமான பிரச்சனைகளையும், சிக்கல்களையும் சந்தித்துள்ளார். இதுதொடர்பாக சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்த அவர், ‘காவலன்’ படத்தை விநியோகம் செய்ததில் இரண்டு முதல் ஐந்து கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதன்பிறகு விநியோகஸ்தர் தொழிலையே விட்டு விட்டதாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே இயக்குநர் ஹரி நடிகர் விஜய் மீது குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், தற்போது மற்றொரு இயக்குநரும் குற்றம்சாட்டியிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here