நடிகை வனிதா – பீட்டர் பால் திருமணம் தற்போது சர்ச்சையில் வந்து நின்றுள்ள நிலையில், வனிதாவிற்கு எதிராக களமிறங்கியிருக்கிறார் சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன். 
திருமணம்
நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் ஜூன் 27ஆம் தேதி தனது வீட்டிலேயே நடந்தது. திருமணத்தின்போது லிப்லாக் முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் வனிதா விஜயகுமார். இப்போது புதிதாக இந்த திருமணத்தில் ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சில மாதங்களாகவே வனிதா விஜயகுமாரும், பீட்டர் பாலும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறிவந்த நிலையில், திருமண பத்திரிகைகள் வெளிவந்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. அதைப்பற்றிய பேச்சுகளும் ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதை ஏதும் கண்டு கொள்ளாமல் தனது மூன்றாவது திருமணத்தின் மீது கவனம் செலுத்தி வந்த வனிதா விஜயகுமார், திருமணத்தை தனது வீட்டிலேயே செம்மையாக முடித்தார்.
தொடரும் பிரச்சனை
சமீபத்தில் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் புதுமண ஜோடி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனக்கு விவாகரத்து கொடுக்காமலேயே பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாகவும், மனக்கசப்பு காரணமாக தாங்கள் பிரிந்து வாழ்ந்ததாகவும், தற்போது தன் கணவன் தனக்கு வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல் வெளியானதையடுத்து, நெட்டிசன்கள் அனைவரும் வனிதா விஜயகுமாரையும், பீட்டர் பாலையும் ஒரு பேச்சு பொருளாகவே பார்த்து வருகின்றனர். பலவகையாக திட்டி தீர்த்தும் வருகின்றனர். மூன்றாவது திருமணத்திலும் வனிதாவிற்கு பிரச்சனை தொடங்கி விட்டதா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். திருமணம் செய்துகொள்ள போவது முன்பு தெரிந்தும் முதல் மனைவி ஏன் இந்த திருமணத்தை நிறுத்தவில்லை என்றும் நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பி உள்ளனர். விவாகரத்து கொடுத்த பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்று பீட்டர் வாக்கு கொடுத்ததால் அமைதியாக இருந்தேன். ஆனால் அவர் கொடுத்த வாக்கை மீறி விட்டு எங்கள் அனைவரையும் கண்டுகொள்ளாமல் வனிதாவை திருமணம் செய்துகொண்டது மிகப்பெரிய தவறு என்று முதல் மனைவி எலிசபெத் ஹெலன் பதிலடி கொடுத்துள்ளார். இதனை பார்த்த வனிதாவும் பணம் பறிப்பதற்காக எலிசபெத் இந்த நாடகத்தை ஆடுகின்றார் எனக்கூறி வருகிறார்.
மூக்கை நுழைத்த லட்சுமி ராமகிருஷ்ணன்
இந்த மூன்று பேருக்கும் இடையே இருக்கும் பிரச்சினையில், புதிதாக மூக்கை நுழைத்து உள்ளார் சர்ச்சைக்கு பெயர் போன நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். அவர் வனிதாவின் திருமணத்தை பற்றி சில டுவிட்களை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். திருமணமாகி விவாகரத்து பெறாதவரை வனிதா எப்படி திருமணம் செய்துகொள்ள முடியும். அது மிகப்பெரிய தவறு. இந்த செய்தியை கேட்டு தான் மிகவும் ஷாக் ஆனதாக அவர் கூறியுள்ளார். அதற்கு பல நெட்டிசன்கள் லட்சுமி ராமகிருஷ்ணனுடன் மாறிமாறி விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். நானும் வனிதாவின் திருமணத்திற்கு வாழ்த்துக்கள் கூறிக் கொண்டுதான் இருந்தேன், ஆனால் விவாகரத்து பெறாமல் திருமணமானது பல ஊடகங்களின் மூலம் தெரியவந்தது. அது மிகப்பெரிய தவறு என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார். இந்த பிரச்சனை எங்கு சென்று முடியும் என்பது தெரியவில்லை. ஆனால் விவாகரத்து கொடுத்து விட்டாரா? இல்லையா? என்று எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. 
மீண்டும் லிப்லாக்
வனிதா, இந்த விவாகரத்தை பற்றி விசாரித்து தான் திருமணம் செய்தாரா இல்லை, தெரியாமல் திருமணம் செய்தாரா என்று பல நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வனிதாவிற்கு மூன்றாவது திருமணமும் பிரச்சனை ஆகிவிட்டதாக பலர் கூறிவரும் நிலையில், இதைப்பற்றி எந்த ஒரு அறிவிப்பும் பீட்டரிடம் இருந்தும், வனிதா விஜயகுமாரிடம் இருந்தும் வெளிவராத நிலையில், ரொம்ப தில்லாக சமீபத்தில் எடுத்த லிப்லாக் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் வனிதா. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி எண்ணிப் பாருங்கள் என்றும், நீங்கள் செய்வது மிக மிக தவறு என்று அவருக்கு பல நெகட்டிவ் கமெண்ட் வந்து கொண்டே இருக்கிறது.















































