பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்வு ரத்து
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என தெரியாத நிலையில், அரசியல் கட்சிகளின் கோரிக்கை மற்றும் மாணவர்களின் நலன் கருதி, பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 80 சதவிகித மதிப்பெண்ணும், வருகைப்பதிவு அடிப்படியில் 20 சதவிகித மதிப்பெண்ணும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் வெளியாகும்
ஊரடங்கிற்கு முன்பாக பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் மாணவ – மாணவிகள் பங்கேற்று தேர்வுகளை எழுதினர். இந்த நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை மாத முதல் வாரத்தில் வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தகவல்
கொரோனா காரணமாக புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதாகி உள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் புத்தகங்கள் தயாராகும் எனவும் செங்கோட்டையன் கூறியுள்ளார். புத்தகங்கள் தயாரானதும் மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாடத்திட்டம் குறைக்கும் பணி நடைபெறுகிறது. சூழ்நிலை கருதி பருவத்தேர்வு ரத்து குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்றும் செங்க்கோட்டையன் தெரிவித்தார். தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.