தேவையானவை
சீரகச்சம்பா அரிசி : 1 1/2 டம்ளர்
பெரிய வெங்காயம் : 1
தக்காளி : 1
பச்சை மிளகாய் : 3
புதினா சிறிதளவு
இஞ்சி மற்றும் பூண்டு விழுது : 1 சிட்டிகை
தேங்காய் பால் : 3 பங்கு அளவு
சோம்பு, கிராம்பு, ஏலக்காய் சிறிதளவு
உப்பு, எண்ணெய், நெய் தேவையான அளவு
செய்முறை
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அதன்பின் நசுக்கிய ஏலக்காய், கிராம்பு, சோம்பு சேர்த்து பொரிக்கவும். பின்பு நீளமாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்கியபின், பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, பச்சை பட்டாணி, புதினா ஆகியவையை சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பின் தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்க்கவும். தேவையான அளவு உப்பை சேர்த்த பிறகு, ஊறவைத்த அரிசியை (20 நிமிடம்) போட்டதும், ஒரு விசில் வந்த பிறகு ஐந்து நிமிடம் சிம்மில் வைத்துவிட்டு இறக்கிவிடவும். இறுதியில் கொத்தமல்லியை சிறிதளவு தூவி கிளறினால் சூடான சுவையான பச்சைப்பட்டாணி தேங்காய் பால் சாதம் தயார்.
தேங்காய் பாலின் நன்மைகள்
தேங்காய் பால் குழந்தைகளுக்கு வயிற்றில் உள்ள புண்களை ஆற்றக்கூடிய சக்தி கொண்டது. உடல்சூட்டை தணிக்கக்கூடியது. பெண்கள் முகப்பொலிவுக்கு தேங்காய் பாலை பயன்படுத்தலாம். பிரசவத்தின்போது பெண்கள் தேங்காய் பாலை அருந்தினால் உடலுக்கு மிகவும் நல்லது.