தமிழகத்தின் தலைநகரான சென்னையை கொரோனாவின் தலைநகராக மாற்றக்கூடாது என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாம்தான் மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார். இதற்காக ‘நாமே தீர்வு’ என்ற புதிய இயக்கத்தை உருவாக்கியுள்ளதாகவும், அதில் அனைவரும் பங்கெடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். ஜாதி, மதம், இனம், மொழி, கட்சி பேதங்கள் இன்றி அனைவரும் ஒரே நேர்கோட்டில் நிற்போம் எனவும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.