நாக சைதன்யா, சோபிதா துலிபாலா திருமணம் டிசம்பர் 4 ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவாகரத்து
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர் நடிகர் நாக சைதன்யா. நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 2017 ஆம் ஆண்டு சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அதன்பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்து வந்த நாக சைதன்யாவை சுற்றி பல காதல் வதந்திகள் பரவி வந்தன.
திருமணம்
இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யாவுக்கு நட்பு ஏற்பட்டது. அது காதலாக மாறியது. இந்த காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இவர்களது நிச்சயதார்த்தம் நாகார்ஜுனா வீட்டிலேயே சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் நாக சைதன்யா, சோபிதா துலிபாலா திருமணம் ராஜஸ்தானில் நடத்த இருந்தனர். இப்போது திடீரென திருமணம் நடைபெறும் இடம் மாறியுள்ளது. ஐதராபாத்தில் நாகார்ஜுனா குடும்பத்துக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இந்த திருமணம் டிசம்பர் 4 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.