அவதார் இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அவதார் 3ஆம் பாகத்துக்கான ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார் அப்பட்டதின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

பிரம்மாண்ட படம்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் உருவாகி, உலகம் முழுவதும் 2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அவதார்’. வசூலில் சாதனை படைத்த இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின்றன. ‘அவதார்’ படத்தின் 2-ம் பாகமான ‘அவதார் தி வே ஆப் வாட்டர்’ திரைப்படம் ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. ஆனால் முதல் பாகம் அளவுக்கு வசூல் செய்ய முடியவில்லை.

அறிவிப்பு

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்தால்தான், அடுத்தடுத்த பாகங்கள் ரிலீஸ் ஆகும் என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்போது அவதார் 3 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 19 ஆம் தேதி அவதார் 3 ”அவதார் 3 – நெருப்பும் சாம்பலும்” படம் வெளியாகும் என அறிவித்துள்ளார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here