விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீஸன் 10 விரைவில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜொலிக்கும் நட்சத்திரங்கள்

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், பல வருடங்களாக வெற்றிநடை போட்டு வருகிறது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. தமிழ் இசை உலகில் மிகப்பெரும் மாற்றத்தை  ஏற்படுத்தி வரும் இந்த நிகழ்ச்சி, தற்போது புத்தம் புதிய சீசனை தொடங்க உள்ளது. 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நாள் முதல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்களிடையே எப்போதுமே சிறந்ததாகவே இருந்து வருகிறது. பல வெற்றிகரமான சீசன்களுக்குப் பிறகு, பிரம்மாண்ட மேடையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த இளம் பாடும் திறமைவாய்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் இந்த மேடையில் பாடும் வாய்ப்பை விஜய் டிவி வழங்கி வருகிறது. போட்டியாளர்களாக பங்கேற்றவர்களுக்கு உரிய அங்கீகாரமும், பிரபல அந்தஸ்தையும் இந்த நிகழ்ச்சி வழங்கியுள்ளது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியிட்ட சூப்பர் சிங்கர் திறமைகள், திரையுலகில் முன்னணி பின்னணிப் பாடகர்களாகவும், உலகெங்கிலும் உள்ள பல நிகழ்வுகளிலும் பங்கேற்று நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர்.

அடுத்த சீசன்

நேயர்களின் அபிமான இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இதுவரை பத்தொன்பது சீஸன்களை நடத்தி முடித்துள்ளது.  இது பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான தனித்தனி சீஸன்களாக நடத்தப்பட்டு சமீபத்தில் பெரியவர்களுக்கான பத்தாவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 12ம் தேதி, முதல்கட்ட நேர்முக தேர்வு (ஆடிஷன்) தொடங்கப்படவுள்ளது. அனைவரும் அறிந்ததுபோல இது பாடும் திறமை வாய்ந்த யார் வேண்டுமானாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உலகப்புகழ் அடைந்துவிடக்கூடிய வாய்ப்பு மக்களாகிய நேயர்களுக்கு வழங்கப்படுகிறது. 

விரைவில் ஒளிபரப்பு

வரும் ஆகஸ்ட் 12ம் தேதி புதுக்கோட்டையில் இதன் நேரடி தேர்வு ஆரம்பமாகவுள்ளது. முதல்கட்ட தேர்வாக புதுக்கோட்டையில் தொடங்கி 40 நகரங்களில் இந்த நேரடி தேர்வுகள் விஜய் டிவியால் நடத்தப்படுகிறது.  திருச்சி, மதுரை, கோவை மற்றும் சென்னையில் இதன் இரண்டாம் கட்ட தேர்வுகள் மற்றும் அடுத்தகட்ட தேர்வுகள்  நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேர்முக தேர்வில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் திறமைந்த போட்டியாளர்கள் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீஸன் 10 நிகழ்ச்சியில் பங்குபெறுவர். இந்த போட்டியில் கலந்துகொள்ள வயது வரம்பு 6 வயது முதல் 15 வயது ஆகும் சிறுவர்கள். இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் விஜய் டிவியின் தொலைக்காட்சி மற்றும் அதன் சோஷியல் மீடியா பிளாட்போர்ம்களில் தெரிவிக்கப்படும் அறிவிப்புகளின் அடிப்படையில் நேரடி தேர்வுகள் இடம்பெறும் இடங்களை தெரிந்துகொண்டு, நேரில் வந்து கலந்துகொள்ள வேண்டும். இந்த ஆடிஷன்கள் முடிந்த பின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீஸன் 10 விரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் என விஜய் டிவி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here