சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் கார்த்தி கைதி – 2 திரைப்படம் குறித்து அசத்தல் அப்டேட் ஒன்றை தெரிவித்திருக்கிறார்.

மோஸ்ட் வாண்டட்

மாநகரம், கைதி திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக விஜயை வைத்து மாஸ்டர் மற்றும் கமல்ஹாசனின் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களின் வெற்றி அவரை உச்ச இயக்குநராக கொண்டு சென்றது. இதையடுத்து மீண்டும் விஜயை வைத்து ‘லியோ’ படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதையடுத்து, தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து அவர் கைதி 2 படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது.

சூப்பர் அப்டேட்

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகர் கார்த்தி, “இந்த வருடத்தில் இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டதாகவும், இரண்டும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு லோகேஷ் தயாராக இருக்க சொல்லியுள்ளதாக தகூறியுள்ள கார்த்தி, அடுத்த ஆண்டு பிரியாணி பக்கெட்ட தூக்கிட வேண்டியதுதான் எனக்கூறி கைதி 2 படம் பற்றிய அப்டேட்டை கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here