சன் டிவியில் ரோஜா சீரியல் மூலமாக பாப்புலர் ஆனவர் நடிகை பிரியங்கா நல்காரி. அந்த தொடருக்கு பிறகு ஜீ தமிழில் சீதா ராமன் என்ற சீரியலில் அவர் நடித்தார். அந்த நேரத்தில் தான் அவர் காதலித்து வந்த ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். குடும்பத்தினர் யாரும் இல்லாமல் மலேசியாவில் ரகசியமாக அந்த திருமணம் நடந்தது. பிரியங்கா நல்காரி தற்போது இன்ஸ்டாபக்கத்தில் தனது கணவருடன் இருக்கும் ஸ்டில்கள் அனைத்தையும் நீக்கிவிட்டார். மேலும் நீங்க சிங்கிளா என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு ஆமாம் என பதில் அளித்திருக்கிறார். இதனால் ஒரே வருடத்தில் கணவரை அவர் பிரிந்துவிட்டாரா என தகவல் பரவி வருகிறது. இந்த தகவலை நடிகை பிரியங்கா நல்காரி மறுத்துள்ளார். தான் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.