நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பை தொடர்ந்து திரையுலகில் மிகவும் ரிஸ்க் அதிகமான தொழிலான தயாரிப்பாளர் தொழிலை கையில் எடுக்க உள்ளார்.

கனவு நாயகி

கடந்த 2016ம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’, ‘துருவங்கள் பதினாரு’ படங்களில் சிறிய கேரக்டரில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன்பிறகு ‘சோம்பி’, ‘நோட்டா’ படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்த யாஷிகா, ‘மணியார் குடும்பம்’, ‘கழுகு 2’ படங்களில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டார். திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தினார். 

மீண்டு வந்தார்

சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை யாஷிகா ஆனந்த், அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருவார். சில மாதங்களுக்கு முன்பு ஈசிஆர் ரோட்டில் ஏற்பட்ட விபத்தில் தனது தோழியை இழந்தார். நீண்ட நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாஷிகா ஆனந்த், தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் பெற்று வீடு திரும்பினார். அதன் பிறகும் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்த யாஷிகா, தற்போது அதிரடியாக புதிய தொழிலில் கால் பதித்துள்ளார்.

புதிய தொழில்

அதாவது யாஷிகா ஆனந்த் திரையுலகில் தயாரிப்பாளராக களம் இறங்கி உள்ளார். இவர் தயாரிக்கும் முதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதனை இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா வெளியிடுகிறார். தயாரிப்பாளராக அறிமுகமான பல நடிகைகள் பணத்தை இழந்துள்ள நிலையில், யாஷிகாவின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் சிலர் அட்வைஸ் கூறுவதுடன், தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here