தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்த பிரபலமான நடிகை அமலா பால். சிந்து சமவெளி படம் துவங்கி ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், விஜய், தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால், கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி தனது நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணம் முடிந்த இரண்டு மாதத்தில் ரசிகர்களுக்கு நல்ல சேதி ஒன்றை அறிவித்துள்ளார். அதாவது தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் அமலா பால். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here