விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஃபிரீஸ் டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கடந்த இரு தினங்களாக பூர்ணிமா, விஷ்ணு, சரவண விக்ரம், தினேஷ், நிக்சன், மணி, விஜய் வர்மா, அர்ச்சனா ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். இந்த நிலையில் எஞ்சியுள்ள மாயா, ரவீனா, விசித்ரா ஆகியோரின் குடும்பத்தார் எண்ட்ரி கொடுத்துள்ளனர். இதில் ரவீனாவின் குடும்பத்தில் இருந்து வந்த அவரது உறவினர்கள் இருவர், ரவீனா – மணி இடையேயான காதல் விவகாரத்தை பற்றி பேசியதோடு, ரவீனாவுக்கு வார்னிங்கும் கொடுத்தனர். இதுகுறித்த காட்சிகள் முதல் புரோமோவில் இடம்பெற்ற நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது புரோமோவில் ரவீனாவின் குடும்பத்தார் விதிகளை மீறியதாக கூறி அவர்களை பாதியிலேயே வெளியேற்றி உள்ளார் பிக்பாஸ்.