கேரளாவில் பெண்களுக்கு நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டிக்கான நல்லெண்ண தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். 

முன்னணி நடிகை

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்து, வசூலை வாரி குவித்தது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாகவும், தேசிய விருது பெற்ற பிரபலமாகவும் அறியப்படுகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தூதர்

இந்த நிலையில், தற்போது கிரிக்கெட் போட்டியின் நல்லெண்ண தூதராக மாறியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். கேரள கிரிக்கெட் சங்கம் (கேசிஏ) தனது மகளிர் அணிக்கான விளம்பர தூதுவரை நியமித்த முதல் நிகழ்வாக இது அமைத்துள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா – ஆஸ்திரேலியா T20 போட்டிக்கான இணையதள நுழைவுச்சீட்டு விற்பனையை நடிகை கீர்த்தி சுரேஷ் தொடங்கி வைத்தார். மேலும் விழாவில் கலந்துகொண்ட கேரளாவின் ஒரே தேசிய அணி வீரரான மின்னு மணியையும் கௌரவித்தார்.

வாழ்த்து

போட்டியில் பங்கேற்கும் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துக் கொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள், சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இளம் வீராங்கனைகளுக்கு நேரம் ஒதுக்கி ஊக்குவித்த கீர்த்தி சுரேஷுக்கு பலர் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here