விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் போட்டியாளர்கள் அவரவர் வாழ்வில் சந்தித்த பூகம்பத்தை பற்றி கூற வேண்டும் என்ற அறிவிப்பு வந்தது. அப்போது நடிகை விசித்ரா அவர் கடந்து வந்த ஒரு கசப்பான விஷயத்தை பற்றி பேசினார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு படத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது மிகவும் பெரிய ஹீரோ நடிகர் ஒருவர் அவருடன் ஆபாசமாக பேசியதையும், படுக்கைக்கு அழைத்ததையும், ஷூட்டிங்கின்போது சிலர் அவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதையும் பற்றி கூறினார் விசித்ரா. மேலும் இந்த விஷயத்தை பற்றி முறையான இடத்தில் கூறியபோதிலும் சரியான நடவடிக்கை எடுக்கப்படாததை அவர் கண்கலங்கி பேசினார்.















































