நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாளத்தில் நடிகை ஜோதிகா ரீ என்ட்ரி கொடுக்கவுள்ள படத்தின் ரிலீஸ் தேதி குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கதைக்கு முக்கியத்துவம்

தமிழில் வாலி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஜோதிகா, பூவெல்லாம் கேட்டுப்பார், முகவரி, ரிதம், குஷி, உயிரிலே கலந்தது, தெனாலி என்று தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் மட்டுமே அதிகமாக நடித்து வருகிறார். அந்த வகையில் 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், ராட்சசி, பொன்மகள் வந்தாள் போன்ற படங்களில் அவர் நடித்தார்.

முக்கிய அறிவிப்பு

தற்போது மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ‘காதல் – தி கோர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜியோ பேபி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு, மிகுந்த ஆவல் நிலவி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி மம்முட்டி நிறுவனம் தயாரித்துள்ள ‘தி – காதல் கோர்’ திரைப்படம் உலகம் முழுவதும் வரும் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதுக்குறித்த அறிவிப்பை தனது எக்ஸ் தளத்தில் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பகிர்ந்துள்ளார் நடிகர் மம்மூட்டி. படத்தின் ரிலீஸ் தேதி குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் இடையில் கவனம் ஈர்த்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here