ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட லவ் டுடே திரைப்படம் வெளியாகி ஓராண்டு ஆன நிலையில் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி பதிவிட்ட பதிவு அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

வியக்க வைத்த நடிப்பு

2019 ஆம் ஆண்டு கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த திரைப்படம், சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக இருந்து வந்த பிரதீப் ரங்கநாதன், பின்னர் லவ் டுடே படத்தை இயக்கினார். அந்த படத்தில் அவர் ஹீரோவாக அறிமுகமானார். ஹீரோவாக இவரது நடிப்பு அனைவரையும் வியக்க வைத்தது. பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். லவ் டுடே படத்தில் இவரது கதாபாத்திரமும் அனைவரையும் கவர்ந்தது. 

கூடுதல் பலம்

லவ் டுடே படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரவி மற்றும் மாமா குட்டி என்ற இரண்டு கதாபாத்திரங்களும் குழந்தைகளுக்கு கூட பரிச்சயமானது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தது கூடுதல் சிறப்பாக அமைந்தது.

வாழ்த்து

லவ் டுடே திரைப்படம் வெளியாகி ஒர் ஆண்டு கடந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில், பலரும் பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள். படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் ஒரு பதிவை பகிர்ந்திருக்கிறார். அந்த பதிவில், “ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு இளம் ஹீரோ சீனுக்குள் வந்தார், வந்த முதல் படத்திலேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்து பிளாக்பஸ்டர் கொடுத்தார். பிரதீபுடன் அடுத்த படத்திற்காக இணைய ஆர்வமாக இருக்கிறோம். குழகுவாக இணைந்து இன்னும் பல லவ் டுடேஸ் கொடுக்கவேண்டும்” என்று வாழ்த்தியிருக்கிறார் அர்ச்சனா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here