கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 
பிளாக் பஸ்டர் ஹிட்
1996 ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் இரண்டாவது பாகமான இந்தியன் 2 இயக்கும் பணியை தொடங்கிய ஷங்கருக்கு பல பிரச்சனைகள் வந்தது. பல்வேறு காரணங்களுக்காக படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தை முடிக்கும் வேலையில் விறுவிறுப்பாக இறங்கியுள்ளார் இயக்குநர் ஷங்கர். 
இந்தியன் 2
இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன், சித்தார்த், மறைந்த நடிகர் விவேக், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சின்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தில் முக்கிய வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து இருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். 
அறிமுக வீடியோ
இதனிடையே ‘இந்தியன் 2’ படத்தின் அறிமுக வீடியோ இன்று (நவ.,3) வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி ‘இந்தியன் 2’ அறிமுக வீடியோவின் தமிழ் வெர்ஷனை நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று மாலை வெளியிட்டார். அதேபோல் மலையாள வெர்ஷனை மோகன்லாலும், இந்தி வெர்ஷனை நடிகர் ஆமீர்கானும், தெலுங்கு வெர்ஷனை இயக்குநர் ராஜமவுலியும், கன்னட வெர்ஷனை கிச்சா சுதீப் வெளியிட்டுள்ளனர். இந்திய 2 படத்தின் அறிமுக வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.















































