கவர்ச்சி ஆடை அணிந்து காபி குடிக்க வந்த சர்ச்சை நடிகை உர்ஃபி ஜாவத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

சர்ச்சை நாயகி

யார் என்ன சொன்னால் என்ன? நான் ‘அப்படிதான்’ என்று வெளிப்படியாக பேசி கிளாமர் போட்டோ, கவர்ச்சி வீடியோ என ரசிகர்களிடையே தீயை மூட்டி வருகிறார் நடிகை உர்ஃபி ஜாவேத். தான் அணியும் ஆடைகளால் பலமுறை விமர்சனத்திற்கும், சர்ச்சைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட இவரை, ஆள் பாதி, ஆடை பாதி என்றே கூறலாம்.

அதிரடி கைது

இந்நிலையில், மும்பையில் இன்று காலை காபி குடிப்பதற்காக கடை ஒன்றிற்கு உர்ஃபி ஜாவத் சென்றுள்ளார். அப்போது, அவரை திடீரென சூழ்ந்த பெண் போலீசார், கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், “பொது இடங்களில் முழு முதுகும் தெரியும் படி ஆடை அணிந்து வந்ததால் உர்ஃபி ஜாவத்தை கைது செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளனர். நடிகை உர்ஃபி ஜாவத்தின் கைதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here