நடிகை பிரகதி தனது 2-வது திருமணம் குறித்து பரவிய தகவலுக்கு காட்டமாக விளக்கம் அளித்துள்ளார்.
குணசித்திர நடிகை
பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷங்க படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரகதி. தமிழில் சில படங்களில் அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், தெலுங்கு, மலையாளப் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அரண்மனை கிளி சீரியலில் மாமியாராக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். 
கருத்து வேறுபாடு
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ் ஆக இருக்கும் நடிகை பிரகதி, அடிக்கடி தனது போட்டோ மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். பிரகதி தன்னுடைய இருபதாவது வயதில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

இஷ்டத்துக்கும் பேசலாமா
இந்நிலையில், டோலிவுட் திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவரை நடிகை பிரகதி காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் தகவல் பரவியது. இந்த செய்தியால் கடுப்பான பிரகதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆதாரம் இல்லாமல் பொய் தகவல் பரப்புவதை காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும், நடிகை என்பதற்காக ஏதாவது பேசலாமா என்றும் கொதித்துப்போய் வீடியோவில் பேசியிருக்கிறார்.















































