தமிழக ஆளுநரை மாற்றிட வேண்டாம் எனவும் நாடாளுமன்ற தேர்தல் வரைக்கும் அவர் இருக்கட்டும் அது தங்களின் பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருமண விழா

தி.மு.க. வழக்கறிஞர் புருஷோத்தம்மன் இல்ல திருமண விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

மாற்றி விடாதீங்க

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; “திராவிடம் என்றால் என்ன என்று உங்களை கேட்க வைத்துள்ளதே, அதுதான் திராவிடம். தற்போது இருக்கும் ஆளுநரை மாற்றி விடாதீர்கள் என பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கோரிக்கை விடுக்கிறேன். குறைந்தபட்சம் மக்களவை தேர்தல் வரையிலாவது ஆளுநரை மாற்றி விடாதீர்கள். எதிர்வரும் மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி வெல்லும். பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலை உருவாகிவிட்டது”. இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here