தமிழகமெங்கும் விஜய் டிவி நடத்தும் பிரபலங்கள் கலந்துகொள்ளும் நவராத்திரி கொண்டாட்டத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

நவராத்திரி விழா

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழகமெங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன் இணைந்து நவராத்திரி கொண்டாட்ட விழாவை நடத்துகிறது. காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய ஏழு இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் இணைந்து திரு விளக்குப் பூஜை, பிரபலங்கள் கலந்து கொள்ளும் நவராத்திரி குறித்த சொற்பொழிவு அமர்வு, சூப்பர் சிங்கர்ஸ் கலந்துகொள்ளும் பக்திப்பாடல் நிகழ்ச்சி, செஃப் தாமுவின் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதம் ஆகியவை நடக்கவுள்ளது. நவராத்திரி பெண்களுக்கு உரித்தான விழா என்பதால் ஸ்டார் விஜய் ஸ்டார்ஸ் பெண் பிரபலங்கள் அனைவரும் இதில் மக்களுடன் இணைந்து கலந்துகொண்டு நவராத்திரியைக் கொண்டாடவுள்ளனர்.

ஸ்பெஷல் பிரசாதம்

திருவிளக்கு பூஜைக்கு முன்பதிவு டோக்கன் பெற்றுக்கொண்ட பக்தர்கள் விளக்கு மற்றும் பூஜை தட்டுடன் வந்தால் மட்டும் போதும், பூஜைக்கான அனைத்து பொருட்களும் வழங்கப்படும். விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் இணைந்து நவராத்திரியை வெகு சிறப்பாகக் கொண்டாடலாம். சூப்பர் சிங்கர் திறமையாளர்களின் பாடல்களை நேரடியாகக் கேட்டு மகிழலாம், அத்துடன் செஃப் தாமுவின் தயாரிப்பில் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதத்தை உண்டு மகிழலாம்.

பல நகரங்கள்

இந்நிகழ்ச்சிகள் காஞ்சிபுரத்தில் கடந்த 15 ஆம் தேதி முதலாவதாக நடைபெற்றது. இதில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் பாக்யலட்சுமி, ஆஹா கல்யாணம் சீரியலிலிருந்து மகா ஆகியோர் மக்களுடன் இணைந்து சிவராத்திரி பூஜையில் கலந்துகொண்டனர். விஜய் டிவி நட்சத்திரங்கள் பூஜையில் கலந்துகொண்டதை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பாராட்டினர். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சென்னையில் 16 ஆம் தேதி, ஈரோட்டில் 17, திருச்சியில் 18, திருநெல்வேலியில் 20, தஞ்சாவூரில் 21, மதுரையில் 22 ஆகிய தேதிகளில் நவராத்திரி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அசத்தல் பரிசு

விஜய் டிவி நவராத்திரி ஸ்பெஷலாக கொலு வைக்கும் போட்டியையும் அறிவித்துள்ளது. உங்கள் வீட்டில் வைக்கும் அழகான கொலுவின் போட்டோவை @vijaytelevision #VijayGoluContest எனும் hashtag உடன் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்யுங்கள். போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும். ஸ்டார் விஜய் டிவி பிரபலங்களுடன் இணைந்து கொண்டாடும் அரிய வாய்ப்பினை பெற்று, விஜய் நட்சத்திரங்களுடன் நவராத்திரியைக் கொண்டாடி மகிழுங்கள். விஜய் தொலக்காட்சியின் நவராத்திரி கொண்டாட்ட நிகழ்ச்சிகளை முழுவதுமாக பிரித்வி இன்னர்வியர்ஸ் நிறுவனத்தினர் வழங்குகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here