விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 
மிகுந்த எதிர்பார்ப்பு
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இதில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் பிரியா ஆனந்த், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். காஷ்மீர், சென்னை உள்ளிட்ட இடங்களில் ‘லியோ; படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. ஆரம்பத்திலிருந்தே இப்படத்தின் மீது உள்ள ஹைப் காரணமாக ரசிகர்களுக்கு மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அனுமதி
‘லியோ’ திரைப்படம் வருகிற 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் லியோ திரைப்படத்திற்கான சிறப்புக் காட்சிகளை திரையிட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி வரும் 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.















































